மால்வாணியில் வி.பீ.எஸ் ஆசிரியர்கள் கூட்டம்

மால்வாணியில் வி.பீ.எஸ் ஆசிரியர்கள் கூட்டம்

இந்த ஆண்டு மால்வாணி திருச்சபையின் வி. பீ. எஸ்-ல் 8 ஆசிரியர்கள் சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்து வருகின்றனர். ஆசிரியப்பணி என்பதே ஒரு சிறப்பானப் பணி. அதிலும் ஆலயத்தில் சிறுவர்கள் மத்தியில் இந்த விடுமுறை வேதாகமப்பள்ளியில் ஆசிரியாராக இருப்பது தனிச்சிறப்பு.

என்னுடைய சிறுவயதில் பல ஆண்டுகள் நான் தன்னாற்வத்தொண்டனாக வி.பீ.எஸ்-இல் பணிப்புரிந்திருந்தாலும், ஆசிரியராக பணிசெய்த ஒரேஒரு ஆண்டு என் மனதில் பதிந்துள்ளது. சிறுப்பிள்ளைகளுக்கு வசனங்களையும் கதைகளையும் சொல்லிக்கொடுத்து அவர்களோடுக்கூட பத்துநாட்கள் சேர்ந்து இருப்பது பெரிய மாற்றங்களை அவர்கள் வாழ்வில் மாத்திரம் அல்ல ஆசிரியரின் வாழ்விலும் கொண்டுவரும். வி.பீ.எஸ்-இன் முடிவில் வருகின்ற திருப்தியை யாராலும் விவரிக்க முடியாது.

மும்பை வந்தபோதும் பலர் தன்னாற்வத்தொண்டு செய்ய முன்வந்தாலும் ஆசிரியராக விரும்பாததைக் கண்டு வருத்தப்பட்டிருக்கிறேன். சிற்றூண்டி கொடுப்பது ஜுஸ் கலக்குவது வேலைசெய்வதைவிட ஆசிரியராக ஒரு பத்து குழந்தைகளை பொறுமையோடு கவனிப்பது கடினம்.

மால்வாணியில் ஒரு சில இளைஞர்களிடம் போதிக்கும் திறமையைக் கண்டு அதை பயன்படுத்தி வளர்க்க ஆசைப்பட்டேன். இந்த ஆண்டு அந்த ஆசை நிறைவேறியது. யார் யார் ஆசிரியராகவேண்டுமென்று திட்டமிட்டேனோ அவர்கள் எல்லாம் சுலபமாக அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமாய் அதைசெய்வதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சி, திருப்தி.

இன்னும் வரும் நாட்களில் இவர்கள் இந்த தாலந்துகளை வளர்த்து ஆண்டவர் நாம மகிமைக்காக வளர்கவேண்டும் என்பதே என் ஜெபம்.