முதல்நாளில் வந்த சிறுவர்கள்

முதல்நாளில் வந்த சிறுவர்கள்

இன்று மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை மால்வாணியில் நடைபெறும் விடுமுறை வேதாகம பள்ளியின் முதல்நாள். இந்த ஒருவாரம் மட்டும்தான் திருச்சபையின் மூலமாக அங்கத்தினரல்லா குழந்தைகள் பயனடைகிறார்கள் என்பதால் அதிக ஜெபத்தோடு இதற்கான ஏற்பாடுகளை செய்தோம்.

இன்று சுமார் 60 சிறுப்பிள்ளைகள் வந்து ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். இதில் ஆச்சரியமான காரியம் என்னவென்றால் இந்த பிள்ளைகளின் பெற்றோர்களும் இறுதி பகுதியில் வந்து கலந்துக்கொண்டு, கதைகளைக்கேட்டு பாடல்களை ரசிப்பதுதான்.

ஒரு சிறுவர்களின் வகுப்பு

ஒரு சிறுவர்களின் வகுப்பு

சிறுப்பிள்ளைகளின் மனதில் தேவனுடைய வசனம் விதைக்கப்படுவதுதான் இந்த வாரத்தின் சிறப்பு. இதன் பலனை உடனடியாக காணமுடியாவிட்டாலும், என்றாவது ஒருநாள் இது பலன்கொடுக்கும் என்கிற அசையாத நம்பிக்கையோடு இந்த ஊழியத்தை செய்கிறோம். இதற்காக தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள். தேவைகளை சந்திக்க பிரயாசப்படுங்கள்.